வேகமெடுக்கும் கொரோனா ஒரே நாளில் மூன்று தெருக்கள் மூடல்

Update: 2021-05-10 16:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் மூடி தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே எட்டுக்கும் மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மேலராமன்புதூர் பகுதியில் உள்ள தளவாய்புரம் ரோடு, அன்னை தெரசா தெரு மற்றும் இயேசு தெரு உள்ளிட்ட மூன்று தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது.

இதில் தளவாய்புரம் ரோட்டில் இரண்டு வீடுகளில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று அன்னை தெரசா தெரு மற்றும் இயேசு தெருவில் ஒரு வீட்டில் 4 பேர் வீதம் மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் மூடி தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றினர். மேலும் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. 

Tags:    

Similar News