விதிமுறைகளை மீறிய கடைக்கு 5 ஆயிரம் அபராதம்
கொரோனா விதிமுறைகளை மீறிய செல்போன் கடைக்கு 5 ஆயிரம் அபராதம்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கூறப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகர் நல அதிகாரி டாக்டர். கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை, ஜான் ஆகியோர் நேற்று மணிமேடை பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சிய போக்குடன் நடந்து கொண்டது தெரியவந்தது, இதனை தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை மீறி கடைக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.