கூலிப்படையை சேர்ந்த 4 பேர் கைது - அதிர வைக்கும் பின்னணி

போலி ஆவணம், ரவுடியிசம், பணம் பறிப்பு.. சினிமாவை மிஞ்சும் அடாவடி.

Update: 2021-04-24 11:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சேது பார்வதி பாய் என்பவருக்கு சொந்தமான கடைகள் உள்ளன. அதில் ஒரு கடையை கணேசபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமாருக்கு என்பவருக்கு சேது பார்வதி பாய் ஒரு வருடத்திற்கு ஒத்திக்கு கொடுத்துள்ளார்.

இதனிடையே ராஜ்குமார் அதனை பத்து வருடத்திற்கு ஒத்திக்கு வாங்கியது போன்று சேது பார்வதி பாய்க்கு தெரியாமல் பத்திர பதிவு செய்துள்ளார். மேலும் சில மாதங்கள் கடைக்கு வாடகையும் செலுத்தாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் வாடகை கேட்டு வந்த சேது பார்வதி பாய்க்கு போலி பத்திரம் மூலம் பத்து வருடம் ஒத்தி என பத்திர பதிவு செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சேது பார்வதி பாய் கோட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.

இறுதியாக அந்தக் கடையிலிருந்து ராஜ்குமாரை மாற்றுவதற்கு சேது பார்வதி பாயிடம் திருநெல்வேலியில் இருந்து ரவுடி ரஞ்சித் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி 12 லட்ச ரூபாய் தந்தால் இந்த கடையை தந்து விடுகிறேன் என பேச்சுவார்த்தை முடிவானதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் சேது பார்வதி பாயிடம் இருந்து பணத்தை வாங்க கூலிப்படையை சேர்ந்த ரஞ்சித் மற்றும் தனவு, சதன், விஷ்ணு நான்கு ரவுடிகள் ராஜ்குமார் சென்று ரூ 12 லட்சத்தை பெற்றுக்கொண்டு ரவுடிகளோடு வந்துள்ளார்.

இந்நிலையில் பணத்தை பெற்று தர ரவுடிகளிடம் இரண்டு இலட்ச ரூபாய் பேரம் பேசிய ராஜ்குமார் ஒரு லட்சம் மட்டும் கொடுத்து விட்டு அவர்களை ஏமாற்ற நினைத்த போது ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் ராஜ்குமாரை நாகர்கோவிலில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு கடத்தி சென்றனர்.

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது மிதம் உள்ள ரூபாயை தருவதாக ராஜ்குமார் சம்மதித்ததால் வாகனம் நிறுத்தப்பட்டது. இதனிடையே நாகர்கோவிலில் இருந்து ராஜ்குமாரின் தம்பி ரவுடிகள் இருக்கும் இடத்திற்கு பணத்துடன் சென்று கொண்டு இருந்த இந்நிலையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த தனிபடை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களை நோட்டமிட்டனர்.

இந்நிலையில் மீதமுள்ள ரூபாயை கொடுக்கும் போது அவர்களை சுற்றி வளைத்த தனிப்படையினர் கூலிப்படையை சேர்ந்த ரஞ்சித் உள்பட நான்கு பேரை கைது செய்தனர், இதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் மீதம் உள்ளவர்களை தனிப்டையினர் கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் போலீசார் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News