நாகர்கோவில் மாநகராட்சியில் 2.72 கோடியில் திட்ட பணிகள் தொடக்கம்

நாகர்கோவில் மாநகராட்சியில் 2.72 கோடியில் திட்ட பணிகள் தொடங்கியது

Update: 2022-03-09 14:15 GMT

மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்

மூலதன மானியத் திட்ட நிதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் NUHM - கீழ் 10 நல வாழ்வு மையகங்கள் மற்றும் 1 ஆய்வகம் கட்டுவதற்காக ரூபாய் 2.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில்  மறவன் குடியிருப்பு பகுதியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு நலவாழ்வு மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News