நாகர்கோவிலில் ரூ. 13.81 கோடியில் சாலை மேம்பாட்டுப்பணி :மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குறிப்பிட்ட காலத்திற்குள் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை மூலதன மானிய நிதி (CGF2021-22) திட்டத்தின்கீழ் ரூ.2 கோடி செலவில் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைத்து சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
மேலும் நாகர்கோவிலில் டதிபள்ளி பகுதியில் ரூ.1.50 கோடி செலவில் நகரை அழகுபடுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதியுடன் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதே போன்று தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் (TURIP2021-22) ரூ1.03 கோடி மதிப்பில் ஹோலி கிராஸ் சாலையில் தார் சாலை புதுப்பித்தல் பணியும் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.4 கோடி மதிப்பில் 34 சாலை சீரமைப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
மொத்தம் ரூ.13.81 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் கட்டிடப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் ஆய்வு செய்தார்.மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.