1059 ஏழை பெண்களுக்கு திருமண உதவி

குமரியில் 1059 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், திருமண நிதி உதவியும் வழங்கப்பட்டன.

Update: 2021-02-16 07:45 GMT

தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான ஏழைப் பெண்களின் திருமணத்திற்கான தங்கத்திற்கு தாலி மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தால் லட்சக்கணக்கான ஏழை பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை ஆகிய ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 1059 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கமும் திருமண நிதி உதவியும் வழங்கப்பட்டன.

அதன்படி 754 பட்டதாரி ஏழை பெண்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் திருமண நிதி உதவியும் 305 பட்டதாரி இல்லாத ஏழை பெண்களுக்கு இருபத்தி ஐந்தாயிரம் நிதி உதவியும் என மொத்தம் நான்கு கோடியே ஐம்பத்தி மூன்று லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் பணமும் (4,53,25000) 8 கிலோ 472 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன.

இதனை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஏழை பெண்களுக்கு வழங்கினார், தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை பெற்றுக்கொண்ட ஏழை பெண்கள் தமிழக அரசிற்கும் தமிழக முதல்வருக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

Tags:    

Similar News