குமரியில் 1 லட்சம் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வருகை: கலெக்டர் தகவல்
குமரியில் 1 லட்சம் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை 493 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது.
இதனிடையே அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு லட்சம் மாணவர்கள் நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு வந்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.