ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் பறிமுதல்

Update: 2021-03-10 15:00 GMT

சட்டமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடை தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது,

இந்நிலையில் நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர், அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததும் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை நாகர்கோயில் வருவாய் கோட்டாட்சியர் மயில் முன்னிலையில் சீல் வைத்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த பணம் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் ல் நிரப்ப கொண்டு வந்ததாக கூறப்படும் நிலையில் போதுமான ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில் பணம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News