கன்னியாகுமரி: 71% பேருந்துகள் இயங்கியது

அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 71 சதவிகித அரசு பேருந்துகள் இயங்கியது.

Update: 2021-02-25 12:30 GMT

ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 71 சதவிகித அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 760 அரசு பேருந்துகளில் 493 அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.

மினி பேருந்துகளின் இயக்கம் வழக்கம் போல் 100 சதவிகிதம் இயங்கி வரும் நிலையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அரசு போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News