கன்னியாகுமரியில் பணம் வைத்து சூதாடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டு மற்றும் 7000/- ரூபாய் பணத்தை பறிமுதல்.;
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட DVD பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் விதிமுறையை மீறி நான்கு பேர் அமர்ந்து இருப்பதை கண்ட போலீசார் அருகில் சென்றனர்.
அப்போது சட்டவிரோதமாக நான்கு பேரும் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் கோட்டாறு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(29), தேவ சூர்யா(22), விக்னேஷ்(27), மற்றும் சுப்ரமணியன்(28) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டு மற்றும் 7000/- ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தார்.