கஞ்சா விற்பனை செய்ததாக 2 பேர் கைது

Update: 2021-02-11 12:30 GMT

கஞ்சா விற்பனை 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளதாக வந்த தொடர் புகாரின் அடிப்படையில் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதில் தனி கவனம் செலுத்திய மாவட்ட எஸ்பி., பத்ரிநாராயணன் உத்தரவுப்படி இதற்காக தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் குறித்த பட்டியல் தயார் செய்து அதிரடி நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் சரக்கல்விளை பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது தப்பி ஓட முயற்சி செய்த நபரை விரட்டி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் உதயராஜ் (25) என்பதும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த கோட்டார் போலீசார் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுடைய 35 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று குளச்சல் துறைமுக பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் வாணியகுடியை சேர்ந்த யூஜின் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News