மருத்துவர்கள் 2 நாள் உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசு புதிய மருத்துவ திட்டத்தை வகுத்து அதன் படி ஆயுர்வேத மருத்துவர்களும் பயிற்சிக்கு பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற நிலையில், அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் பல் மருத்துவர்கள் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-02-05 17:30 GMT

போராட்டத்தில் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் பல பகுதிகளில் கடந்த 1ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் 2 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

போராட்டம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், டீயும் காபியும் கலந்து குடிக்க முடியாதது குடித்தால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது போல் ஆயுர்வேத மருத்துவத்தையும் அலோபதி மருத்துவத்தையும் இணைத்து புதிய மருத்துவ முறையை மத்திய அரசு கொண்டு வருவதாகவும் இதனால் மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்கள் புதிய மருத்துவ முறையால் பெரும் இடையூறுகளை சந்திக்கும் நிலை உருவாவதோடு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதோடு மயக்கவியல் நிபுணர்கள் உட்பட அதிநவீன மருத்துவ வசதிகள் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் முறை ஏற்கத்தக்கது அல்ல எனவும் குற்றச்சாட்டினர். தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் தயாராகி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News