அபராதம் கடை அடைப்பு அதிரடி காட்டும் மாநகராட்சி அதிகாரிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் .

Update: 2021-05-13 07:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் காய்கறிகடைகள், டீக்கடைகள் செயல்படுவதாகவும் பாதுகாப்பான இடைவெளி இன்றி வியாபாரத்தை மட்டுமே வியாபாரிகள் பார்ப்பதாகவும் மாநகராட்சிக்கு தொடர் புகார் வந்தது.

புகாரைத் தொடர்ந்து ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பெயரில், மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் உள்ள கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது வேப்பமூடு சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, பறக்கை விலக்கு, பீச் ரோடு சந்திப்பு, கோட்டார் உள்ளிட்ட இடங்களில் அரசின் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட கடைகள் கண்டறியப்பட்டு மொத்தம் 22,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து விதிகளை மீறி செயல்பட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Tags:    

Similar News