வரதட்சணை கேட்டு கருக்கலைப்பு - இளம்பெண் மகிளா நீதிமன்றத்தில் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம்;
கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் ஜீவா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மகள் 26 வயதான கோகிலா. இவருக்கும் சீதப்பால் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 50 பவுன் நகையும், 2.10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த பின்னர் கோகிலாவின் தந்தை பெயரில் உள்ள வீட்டை எழுதி வாங்கி வா என்றும், குழந்தை கருவுற்ற போது மாத்திரை கொடுத்து அழித்ததாகவும், குடித்து விட்டு அடித்ததாகவும் கோகிலா நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வனிதா,கோகிலாவின் கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
#kanniyakumari #nagarkovil #tamilnadu #instanews #கன்னியாகுமரி #நாகர்கோவில் # Inspector #pregnant # Case