மக்கள் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே வாக்களிப்பார்கள் என தளவாய்சுந்தரம் தோவாளையில் தெரிவித்தார்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக முதல்வரின் உழைப்பு மக்கள் அனைவருக்கும் தெரியும், ஆளுமை கொண்ட அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை தீட்டி அதன் செயல்பாடு நேரடியாக மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்பட்டது.மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்ற அளவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நிர்வாகம் இருந்தது.கடந்த 4 ஆண்டுகளில் அரசு செய்த சாதனைகளை மட்டும் கூறி வாக்கு சேகரிப்போம்,மக்கள் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.