தேர்தல் பிரச்சாரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா குமரிமாவட்டம் வந்தார். சுசீந்திரம் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா கூறும் போது,
பிரதமர் மோடி அரசின் மக்கள் நல திட்டங்களை வீடுவீடாக கொண்டு சேர்க்க வேண்டும், இங்கு திரண்டு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் மிகவும் திருப்தியாக இருக்கிறது. பாஜக அதிமுக கூட்டணி நிச்சயம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன். தற்போது நான் தேர்தல் பிரச்சாரத்தை குமரியில் தொடங்கி வைத்துள்ளேன், பொன் ராதாகிருஷ்ணன் தனது அடுத்தகட்ட பிரசாரத்தை மேற்கொண்டு தனது வெற்றியை நிலை நாட்டுவார் என தெரிவித்தார்.