நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு வித்தியாசமான வகையில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.அதன்படி பணியாளர்கள் தங்கள் விருப்பப்படி கை கால்களை அசைத்து மனது விட்டு சிரித்து யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒருவர் சிரிப்பதை பார்த்து அடுத்தவர்கள் தானாக சிரித்து இந்த பயிற்சியை மேற்கொண்டனர்.பொதுவாக வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழியை மையப்படுத்தி இந்த சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தங்களுக்கு பெருமளவில் மனஅழுத்தம் குறைவதாகவும் காலையில் இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது இந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் உடல் சோர்வு இல்லாமலும் பணியாற்ற இந்த பயிற்சி மிகுந்த பலனை தருவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.