மனித பாதுகாப்பு கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள உள்அரங்கில் நடைப்பெற்றது. இதில் அக்கழகத்தை சேர்ந்த மாநிலம் முழுவதும் இருந்து வந்து இருந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனித பாதுகாப்பு கழகத்தின் நிறுவனர் ஜெய்மோகன் கூறுகையில் தமிழகத்தில் வீழ்ந்து கிடக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை காக்க எப்பொழுதும் தங்கள் கழகம் முன் நிற்கும். தமிழகத்தில் விஷம் போல் ஏறி விட்ட விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்ததில் மக்களுக்கு சேவையாற்றும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என்றும் இல்லையென்றால் தனித்து போட்டியிட போட்டியிடுவோம். உலக சுற்றுலா தளமான குமரியில் புதிதாக விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.