மக்கள் அரசை தேடிச் செல்லும் நிலையை மாற்றி, அரசு மக்களைத் தேடிச் செல்லும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிராமப்புற மக்கள், கர்ப்பிணி பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் வெள்ளமடம் பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி அம்மா மினி கிளினிக் அமைத்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக தொடங்கப்பட்ட தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.
வெள்ளமடம், பீம நகரி, திருப்பதிசாரம் உள்ளிட்ட 6 கிராம மக்களின் பெரும் ஆதரவுடன் அம்மா மினி கிளினிக் செயல்பாட்டை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன், அரசு அதிகாரிகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.