பெரியார் விருது பெற்ற தமிழ்மகன் உசேனுக்கு பாராட்டு விழா

புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் அதிமுக உருவாக்கப்பட்ட நாள் முதல் கட்சியின் அடிமட்ட தொண்டராகவும் மாவட்ட செயலாளர் முதல் மாநில பொறுப்புகள் வரை பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தமிழ்மகன் உசேன்.;

Update: 2021-02-08 04:15 GMT

தற்போது 84 வயதிலும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும், அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் இருந்து பணி ஆற்றி வருபர்  தமிழ்மகன் உசேன். இவருக்கு சமீபத்தில் தமிழக அரசு தந்தை பெரியார் விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பிலும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மன்றம், எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் தமிழ்மகன் உசேனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர், மேலும் பரிசுகள் வழங்கியும் ஆசி பெற்றும் அவரை கவுரவித்தனர்.

விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான அசோகன், குமரி மேற்கு மாவட்ட செயலாளரும் அரசு ரப்பர் வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர் கூட்டுறவு சங்க தலைவருமான ஜான் தங்கம் மற்றும் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாநில மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News