நாகர்கோவில் எம்எல்ஏ., மீது வழக்கு

Update: 2021-02-08 05:15 GMT

நாகர்கோவில் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் கட்டப்பட்ட தி.மு.க., கொடியை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சி எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்.,6ல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நாகர்கோவில் வந்த போது, மாவட்டஆட்சியர் அலுவலகம் எதிரில் தி.மு.க., கொடிகள் கட்டப்பட்டன. நேசமணி நகர் போலீசார் அந்த கொடிகளை அகற்ற முயன்ற போது திமுக தொண்டரணி அமைப்பாளர் ராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் அங்கு வந்த சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., தமிழக முதல்வர் வரும் போது இங்கு அதிமுக., கொடி கட்டப்பட்டிருந்தது. அதை அகற்றாததால் இப்போதும் அகற்ற முடியாது என்றாராம். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News