கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தவறான எண்ணம் இருந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தனக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டது பொதுமக்களிடையே புது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-02-05 17:15 GMT

உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்த கொரோனா என்னும் கொடிய நோயின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து இருந்த நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறுகட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் புதிய நம்பிக்கையுடன் தங்களது அன்றாட பணிகளை தொடங்கினர்.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனாதடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தனி கவனம் காரணமாக கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மேலும் தடுப்பு நடவடிக்கையாக நான்கு கட்டங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News