பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரரும் பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா அமைப்பின் தேசிய தலைவருமான பிரகலாத் மோடி கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார். நாகர்கோவில் வந்த அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில், தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு நேரடியாக சென்று சுவாமி தரிசனம் செய்ததோடு கோவிலின் வரலாறு குறித்தும் கேட்டறிந்தார்.