வரலாற்றிலேயே முதல் முறையாக காணும் பொங்கல் அன்று கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது.
கொரோனா பரவல் காரணமாக கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.பொதுவாக காணும் பொங்கல் நாளில் குடும்பத்தினருடன் அதிகாலை முதலே கன்னியாகுமரியில் குவியும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அங்கு அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில், கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவற்றை பார்ப்பதோடு இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம். இந்த வருடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை இருப்பதால் வரலாற்றில் முதன் முறையாக காணும் பொங்கல் நாளில் கன்னியாகுமரி வெறிச்சோடியது.