பதவி ஏற்றவுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள்
நாகர்கோவிலில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
தமிழகத்தில் பிப்.19ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பிப்.22ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் முடிவு அறிவித்த உடனேயே வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவியேற்று கொண்டனர். இந்நிலையில் பதவி பிரமாணம் முடிந்த கையோடு திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களை திமுக முக்கிய நிர்வாகிகள் சுற்றுலா வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தங்கள் கட்சி கவுன்சிலர்கள் மீது நம்பிக்கை இல்லாத திமுக நிர்வாகிகள் கவுன்சிலர்களை கொடைக்கானல் அழைத்து சென்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.