உலக வன நாளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி: குமரி ஆட்சியர் பங்கேற்பு
உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், குமரி மாவட்ட ஆட்சியர் பங்கேற்று மரகன்றுகளை நட்டு வைத்தார்.;
சர்வதேச வன தினத்தை முன்னிட்டு வனங்களை பாதுகாக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்குடி, பொழிமுகம் பகுதியில் மாங்க்ரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த் கலந்துகொண்டு மாங்க்ரோவ் செடிகளை பொழிமுக பகுதியில் நாட்டினார். அப்போது மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா, வனச்சரக அதிகாரிகள் அவன் அவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அதிகாரி இளையராஜா, காடுகளை காப்பதற்காகத்தான் உலக வன தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டம் தான் அதிக அளவு வனப் பரப்பு கொண்டது என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் மாங்க்ரோவ் மரக்கன்று நடப்பட உள்ளன என்றும் இதில் முதற்கட்டமாக இன்று மாங்க்ரோவ் கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்றோம் என தெரிவித்தார்.
இந்த மரம் நடும் நிகழ்ச்சியை மாவட்ட வனத்துறை, கன்னியாகுமரி ரோட்டரி கிளப் மற்றும் ஹீல் நிறுவனம ஆகியவை இணைந்து நடத்தின.