குமரியில் திமுக அமைச்சருடன் நாம் தமிழர் கட்சியினர் சந்திப்பு

குமரியில் திமுக அமைச்சரை சந்தித்து நாம் தமிழர் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2021-07-18 12:00 GMT

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு நாம் தமிழர் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜை சந்தித்தனர்.

குமரி மாவட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும், மக்கள் நலன்களில் இணைந்து பணியாற்றுவதும் குறித்தும் அப்போது விவாதிதனர்.

மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்ட நாம் தமிழர் கட்சியினர் அனைத்து மக்கள் நலனிலும் துணை நிற்போம் என்றும் உறுதி அளித்தனர்.

தங்களுடைய கட்சி கொள்கைக்கு எதிரான கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்யும் நல்ல காரியத்தை எதிர் கட்சியை சேர்ந்தவர் வரவேற்று வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது. 

Tags:    

Similar News