அரசு மற்றும் நீதி மன்றத்தின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை. எஸ்.பி எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி நாளில் அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
விநாயகர் சதுர்த்தி சிலை வைத்தல் தொடர்பான அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை விளக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தனி நபர்கள் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யலாம், ஆனால் பொது இடங்களில் வைக்க அனுமதி இல்லை.
விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்வதற்க்கும் கும்பலாக சென்று கறைப்பதற்கும் தடை செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை கரைக்க தனி நபராக அருகே இருக்கும் நீர் நிலைகளில் கரைக்கலாம்.
மேலும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும், அரசு மற்றும் நீதி மன்றத்தின் உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.