மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்

குமரியில் மெகா தடுப்பூசி முகாமில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-09-12 13:45 GMT

பைல் படம்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்ற நிலையில் தமிழக அரசு இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெரும் என அறிவித்தது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 624 மையங்களில் நடைபெறும் மையங்கள் மூலமாக 85 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் முதல் மாவட்டத்தில் 85 சதவிகித பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது

மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடங்களில் கூட குறைவான அளவே தடுப்பூசி இருப்பில் இருந்ததால் தடுப்பூசி செலுத்தி கொள்ள நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடனும் வேறு மையங்களை தேடி அலையும் சூழ்நிலையும் உருவானது.

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் 52 வார்டுகளில் 80 க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசிகள் தீர்ந்தன.

ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டாலும் மறு புறம் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வந்தது கொரோனா பரவளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

Tags:    

Similar News