குமரியில் மெகாதடுப்பூசி முகாம்: ஊர்த்தலைவர்கள் மத்தியில் விழிப்புணர்வு

குமரியில், மெகா தடுப்பூசி முகாம் தொடர்பாக ஊர் தலைவர்களை சந்தித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.;

Update: 2021-10-08 14:15 GMT

மெகா தடுப்பூசி முகாம் குறித்து, ஊர்த்தலைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதாரத்துறையினர். 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக,  தமிழக அரசின் உத்தரவின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனிடையே தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

அவ்வகையில், வரும்  ஞாயிற்றுக்கிழமை (10/10/2021) நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட வைக்கும் நோக்கில், விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவிற்கிணங்க, ஊர்த்தலைவர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுடன், ஆலோசனை கூட்டம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற்றது.

இதேபோன்று, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் உள்ள ஊர்த்தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News