தொடர் விடுமுறையால் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையால் குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தொடர்விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. தமிழ் புத்தாண்டுடன் தொடர் விடுமுறையால் தமிழக கேரளா பகுதியை சார்ந்த சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் வந்து அருவியில் குளித்து வருகின்றனர். அதேபோல் சிறுவர் பூங்கா, படகு சவாரி என அனைத்து பகுதியிலும் சுற்றிலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.