குமரியில் 2 மாதங்களுக்கு பின் தலை தூக்கிய கொரோனா - பொதுமக்கள் அச்சம்

குமரியில் 2 மாதங்களுக்கு பின் தலை தூக்கி உள்ள கொரோனாவால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2022-04-26 08:45 GMT

பைல் படம்.

கேரளா மாநில எல்லையுடன் இணைந்து இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்ட நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உருவானது.

சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கிருமி நாசினி உபயோகித்தல் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் அதனை கடைபிடித்த பொதுமக்களால் கொரோனா தொற்று பரவல் முழுமையாக ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்த இன்ஜினியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் பட்டியல் எடுத்து வருகின்றனர்.இதனிடையே இரண்டு மாதங்களுக்குப் பின்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று தொடங்கிய நிலையில் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News