சர்ச்சை பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதி மன்றம்.

வயது முதிர்வோடு இதய நோயாளியாகவும் இருப்பதால் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-10 12:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது இந்து மதம், இந்து மத வழிபாடு, பாரதமாதா, பாரத பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் குறித்து அவதூறாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசினார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஜார்ஜ் பொன்னையாவை மதுரையில் வைத்து கைது செய்தனர். தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த மனுக்கள், அனைத்தும் மாவட்ட நீதிமன்றத்தில் இரத்து செய்யப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.வயது முதிர்வோடு இதய நோயாளியாகவும் இருப்பதால் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், திருச்சி தில்லை நகர் காவல்நிலையத்தில் தினமும் கையளித்திட வேண்டும், என்றும் வரும் காலங்களில் மதம், அரசியல், பிரச்சனைகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது எனவும் ஐகோர்ட் கிளை அறிவுரை வழங்கியுள்ளது.

Tags:    

Similar News