புனித குழந்தை தெரேசா ஆலய ஆண்டு திருவிழா - ஆடம்பரம் இல்லாமல் தொடங்கியது

குமரியில் புனித குழந்தை தெரேசா ஆலய ஆண்டு திருவிழா ஆடம்பரம் இல்லாமல் தொடங்கியது.

Update: 2021-09-28 15:15 GMT

தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அனைத்துவித கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து குறைந்த அளவு கூட்டத்துடன் காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரேசா ஆலய ஆண்டு திருவிழா 3 பங்கு தந்தையர்கள் தலைமையில் கொடியைற்றத்துடன் துவங்கியது.

பிரசித்தி பெற்ற தேவாலயத்தில் ஆடம்பரமாக நடக்க வேண்டிய திருக்கொடியினை புதுக்கடை பங்குதந்தை ஜீஸ் டைமண்ட் அர்ச்சிப்பு செய்து கொடிக்கம்பத்தில் ஏற்றி திருவிழாவினை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து முதல் நாள் திருவிழா திருப்பலி நடந்தது திருப்பலி நடத்திய பங்கு தந்தையர்களுக்கு கும்ப மரியாதையை பங்கு மக்கள் வழங்கி வரவேற்றனர்.

திருப்பலியில் கலந்து கொண்ட மக்கள் ஆலயத்திற்குள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர், திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News