ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி தேர்வை ஆன் லைன் மூலம் நடத்த வேண்டும்
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆசிரியர் கல்வி தேர்வை ஆன் லைன் மூலம் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களான 64 ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்ட நிலையில், வரும் 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளதோடு சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் நேரடியாக சென்று தேர்வு எழுத வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால் அந்த சம்பந்தப்பட்ட மாணவ மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர், தங்களுக்கும் ஏனைய பல்வேறு பிரிவுகளில் பயின்ற மாணவர்களை போல ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கூறும் போது தற்போது தமிழகம் முழுவதும் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் உட்பட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வரும் 2ஆம் தேதி முதல் தேர்வு எழுத உள்ள நிலையில் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனா நோய் தொற்று ஓயாத நிலையில் தேர்வு எழுத வரும் மாணவ மாணவியரில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் அவர்கள் மூலம் பிற மாணவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதால் தொடர்ந்து தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும்.
மேலும் அது தொற்று பரவலுக்கு வாய்ப்பு ஏற்படும் என்பதால் ஏனைய மாணவர்களைப் போல தங்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத அரசு உத்தரவிட வேண்டும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.