சக மாணவர்களின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்
குமரியில் பள்ளியில் சக மாணவர்களின் துன்புறுத்தலால் 11 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தயம்பலம் பகுதி குஞ்சாகோட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்( 47), இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்
இவருடைய மகன் சபின் (16), இவர் பூட்டேற்றியில் உள்ள கன்கார்டியா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார், இந்த மாணவன் கடந்த சில நாட்களாக யாரிடமும் அதிகமாக பேசாமல் மௌனமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அறையில் தூங்க செல்கிறேன் என்று கூறி சென்றுள்ளார்,.மறுநாள் காலையில் அறையை சென்று பார்த்த போது சபின் நைலான் கயிறால் கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தூக்கில் தொங்கி நின்ற இடத்தின் அருகில் ஒரு கடிதம் இருந்தது, அந்த கடிதத்தில் அப்பா அம்மா என்னை மன்னிக்கவும் என்னுடைய பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள், அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சபினின் அம்மா லலிதா அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.