போலியான பொருட்களால் மாேசடி: சிசிடிவி கேமராவில் சிக்கிய மர்ம நபருக்கு வலைவீச்சு
கருங்கல், தெருவுக்கடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் போலியான பொருட்களை மர்ம நபர் விற்பனை செய்து வருகிறார்.;
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், தெருவுக்கடை, மார்த்தாண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வியாபார நிறுவனங்களில் போலியான பொருட்களை மர்ம நபர் விற்பனை செய்து வருகிறார்.
கேரள பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மட் அணிந்து கொண்டு வரும் மர்ம நபர் ஒருவர் குறிப்பிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் உரிமையாளர்கள் இல்லாத நேரம் பார்த்து கடைக்கு செல்கிறார்.
அதன்படி செல்லும் மர்ம நபர் அங்கு இருக்கும் பணிப்பெண்களிடம் உரிமையாளர் ஆர்டர் செய்த பொருட்களை கொண்டு வந்துள்ளேன் எனக்கூறி போலியான பொருட்களை கொடுத்து விட்டு ஒவ்வொரு கடையிலும் 2000 முதல் 4000 ருபாய் வரை ஏமாற்றி பெற்றுள்ளார்.
இந்த மர்ம நபர் எங்கிருந்து வருகிறார் குமரி மாவட்டத்தை சேர்ந்த நபரா அல்லது கேரளாவை சேர்ந்த நபரா என்ற எந்த தகவலும் தெரியாத நிலையில் இவர் குறித்த சிசிடிவி காட்சிகள் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்கள் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.