அனுமதி இன்றி ரப்பர் மரம் வெட்டி கடத்தல் - போலீசார் விசாரணை
குமரியில் அனுமதி இன்றி ரப்பர் மரம் வெட்டி கடத்தியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான ரப்பர் எஸ்டேட்கள் உள்ளன, அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இந்த எஸ்டேட்களில் இருந்து அனுமதி இன்றி ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான காடுகளில் இருந்தும் உரிமையாளருக்கு தெரியாமல் ரப்பர் மரங்கள் வெட்டப்படுபதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் திற்பரப்பு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ரப்பர் மரங்களை சிலர் அனுமதியின்றி வெட்டி கடத்துவதாக வந்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது எந்த வித அனுமதி மற்றும் ஆவணங்கள் இன்றி ரப்பர் மரங்கள் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அந்த ரப்பர் மரங்கள் அனுமதி இன்றி வெட்டப்பட்டு கடத்தப்படுவது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்ததோடு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.