வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சுமார் பதினோரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் இந்த கனமழையின் காரணமாக குளங்கள் உடைந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இதனால் நீர் வெளியேறி சாலைகளில் ஆற்று வெள்ளம் போல் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது, பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சூறைக்காற்று மற்றும் பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன .