பணி முடிந்தும் பணம் கொடுக்க மறுப்பு: பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் தர்ணா

நாகர்கோவிலில் பணி முடிந்தும் பணம் கொடுக்காததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

Update: 2021-10-03 14:00 GMT

நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மில்லன்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 35 வருடங்களாக ஒப்பந்ததாரராக பணியாற்றி வருபவர் மில்லன்.

இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள அத்திக்கடவு சானலை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இவரிடம் கொடுத்த நிலையில், அவர் அந்த பணியை முழுவதுமாக முடித்து ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே பணிக்கான பணத்தை மில்லனிடம் வழங்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இவரை அழைக்களிப்பதாகவும், காரணம் கேட்டால் பதில் கூறாமல் செல்வதாகவும் கூறி இன்று நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் வந்த மில்லன் திடீரென அழுவலகத்தினுள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மில்லன் கூறும் போது பணி முடிந்து கொடுத்த பணம் வந்த பிறகும் அதனை அதிகாரிகள் தர மறுப்பது ஏன் என்றும் ஊழல், லஞ்சத்தை அதிகாரிகள் எதிர்பார்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News