குமரியில் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது பூக்களின் விலை

கடும் பனிப்பொழிவு, கனமழையால் குமரியில் வரலாறு காணாத அளவுக்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

Update: 2021-12-09 12:45 GMT

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் மலர் சந்தைக்கு,  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயம் செய்யப்படும் பூக்கள் கொண்டு வரப்பட்டு,  அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதனிடையே, தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது, அதன்படி கிலோ ரூபாய் 1,600 -க்கு விற்பனையான மல்லிகை பூ,  கிலோ 2,800 ரூபாய்க்கும், கிலோ ரூபாய் 800 க்கு விற்பனையான பிச்சிப்பூ,  கிலோ 1,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அரளிப்பூ கிலோ 450 ரூபாய், முல்லைப் பூ கிலோ ஆயிரம் ரூபாய், சம்பங்கி கிலோ 300 ரூபாய், கனகாம்பரம் கிலோ ஆயிரம் ரூபாய், வாடாமல்லி கிலோ 100 ரூபாய், தாமரை(100 எண்ணம்) 2000 ரூபாய், கோழிப்பூ 80 ரூபாய், மஞ்சள் கிரேந்தி கிலோ 150 ரூபாய், அரளி உட்பட அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

கார்த்திகை மாதம் கோவில் விழாக்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் வரும் நிலையில் கனமழை, பனிப்பொழிவு உள்ளிட்ட  காரணங்களால்,  வரத்து குறைந்து பூக்களின் விலை அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News