குமரியில் ஒரே நாளில் 1077 நபர்கள் மீது வழக்கு பதிவு -217 வாகனங்கள் பறிமுதல் -காவல்துறை அதிரடி
குமரியில் ஒரே நாளில் 1077 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 217 வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறை அதிரடி.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் ஊராடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது.
மேலும் மாவட்டம் முழுவதும் 49 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறை தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறியது மற்றும் ஊராடங்கை மீறியது தொடர்பாக ஒரே நாளில் 1077 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முக கவசம் அணியாமல் வந்ததாக 777 பேர் மீதும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 83 பேர் மீதும் ஊராடங்கை மீறியதாக 217 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய 217 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.