கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற வாகனங்கள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
குமரியில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுமதி இன்றி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் தினந்தோறும் கனிம வளங்கள் கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டங்களை மேற்கொண்டும் கனிம வளங்கள் கடத்தல் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதனிடையே இன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் திடீரென வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரத்துடன் கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி வந்த 20 க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஏராளமான லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, ஒரு நாளில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான லாரிகள் சிக்கிய நிலையில் இந்த சோதனையை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.