குமரியில் கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
கனிமவளங்கள் கடத்தபடுவதை தடுக்க வேண்டும் என கூறி குமரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க தலைவர் நாகராஜன் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அரவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில்.குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை உடைக்கப்பட்டு அண்டைய மாநிலமான கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்திட வேண்டும்.
கனரக வாகனங்கள் குமரி மாவட்டம் சாலைகளில் கற்கள் கொண்டு செல்வதால் பொதுமக்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவது மட்டுமல்லாது, நமது மாவட்ட சாலைகள் உருக்குலைந்து வருகிறது .
எனவே மலைகள் உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதுடன், அளவுக்கு மீறிய பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தடுத்தி நிறுத்திடவும், நமது சாலைகள் பாதுகாத்து பராமரிக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.