தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - தங்க சங்கிலி பறிமுதல்

குமரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-10-31 15:00 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இச்சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் யார் என்பது குறித்த தகவல் தெரியாமல் போலீசார் திணறி வந்தனர்.

நாளுக்கு நாள் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்த நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு குற்றவாளிகள் குறித்த அடையாளம் தெரிந்தது.

அதன்படி குலசேகரம் காவல்நிலைய பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தூத்துரை சேர்ந்த பாபு என்ற நபரை குலசேகரம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து மூன்றரைபவுன் தங்கசங்கலி பறிமுதல் செய்யபட்ட நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News