கொரோனா காலத்தில் சிறப்பான பணி: பிஆர்ஓ அலுவலக பணியாளர்களுக்கு பாராட்டு

கொரோனா காலத்தில் சிறப்பான பணி புரிந்த குமரி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.;

Update: 2022-01-27 14:00 GMT

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பிஆர்ஒ அலுவலக பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையை சேர்ந்த அலுவலர்கள் இரவு பகல் பார்க்காமல் சிறப்பாக பணிபுரிந்தனர்.

அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்து செல்வது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி என அவர்களின் பணி பொதுமக்களின் பாராட்டை பெற்றது.

இந்நிலையில் குமரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதன்படி தொழில்நுட்ப உதவியாளர் அருண், திரைப்பட கருவி இயக்குனர் இளங்கோ, மின் உதவியாளர் தினேஷ், வாகன ஓட்டுனர்கள் சதீஷ் குமார் மற்றும் குமார் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags:    

Similar News