ஓணம் பண்டிகை - குமரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.;

Update: 2021-08-19 13:00 GMT

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பைல் படம்

கேரளா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை ஒன்று.கானம் விற்றாகிலும் ஓணம் கொண்டாடு என்பது பழமொழி, அதாவது கால் இடம் இருந்தாலும் அதனை விற்று ஓணம் கொண்டாடு என்பது பொருள்.

அந்த அளவிற்கு முக்கியத்துவம் அளித்து கேரளா மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய மன்னர் ஆட்சி காலத்தில் கேரளாவின் ஒரு பகுதியாக இருந்த நிலையில் குமரியில் பெரும்பாலான மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவர்.

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் செயல்படாது என அறிவித்து உள்ள மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வரும் 11-09-21 சனிக்கிழமை வேலை நாளாக இயங்கும் என்றும் உள்ளூர் விடுமுறை நாளில் அத்தியாவசிய பணிகள் தேவையான பணியாளர்களை கொண்டு நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News