முழு முடக்கம்: முடங்கியது கேரளாவில் இயல்பு வாழ்க்கை

முழு முடக்க போராட்டத்தால் முடங்கிய கேரளாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.;

Update: 2022-03-28 13:00 GMT

முழு அடைப்பால், திருவனந்தபுரத்தில் வெறிச்சோடி காணப்பட்ட சாலை. 

மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுத்தல் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் இன்று மற்றும் நாளை நாடு தழுவிய பொதுமுடக்க போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், முழு முடக்கம் போராட்டம் கேரளா மாநிலத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது,. இதன் காரணமாக திருவனந்தபுரம் மாவட்டம் உட்பட கேரளாவின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசிய பொருளான பால் மற்றும் மருந்து கடைகளை தவிர பிற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன,  அதன்படி காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் அடைக்கப்பட்டு உள்ளன.

மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காத நிலையில், ஆட்டோ டேக்சி உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை, இன்று தொடங்கி 2 நாள் நடைபெறும் இந்த முழு முடக்க போராட்டம் காரணமாக,  கேரளா மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ள நிலையில் அவர்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News