படகு மூலம் மலைவாழ் மக்களை சந்தித்த எம்பி: நலத்திட்ட உதவிகளை வழங்கல்
படகு மூலம் சென்று மலைவாழ் மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மலையோர கிராமங்களான தச்சமலை, புறாவிளை போன்ற மலையோர கிராம மக்களை சந்திக்க பேச்சிப்பாறை அணையிலிருந்து இருந்து 3 - கிலோமீட்டர் தொலைவில் உள்ள தச்சமலை மலைகிராமத்திற்கு படகுமூலலமாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பொதுமக்களை சந்தித்தார்.
அவருக்கு மலைவாழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து சாலைகள், மின்சாரம் ,பள்ளிக்கூடங்கள், அரசு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் அவெட் தொண்டு நிறுவனம் மூலம் மளிகை பொருட்கள், டார்பாய் ,பெட்சீட் உட்பட அத்தியாவசிய பொருட்களை கிராம மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வழங்கினார்.