குமரி கோவிலில் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளை: பிரசன்னத்தில் அதிர்ச்சி தகவல்
கோடிக்கணக்கில் தங்கம், வைர நகைகள் கொள்ளை போய் இருப்பதாக ஆதிகேசவ பெருமாள் கோவில் தெய்வ பிரசன்னத்தில் அதிர்ச்சி தகவல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும், பிரசித்தி பெற்ற 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்.
இங்குள்ள தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று சமீபத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே கோவில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு பெற்ற தெய்வ பிரசன்னம் பார்க்கப்பட்டது. புகழ்பெற்ற கேரளா ஆஸ்தான தந்திரிகள் தலைமையில் நடைபெற்ற தெய்வ பிரசன்னத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி கோயிலுக்கு சொந்தமான 40 சதவிகிதம் சொத்துக்கள் மற்றும் காவுகள்(நீர்நிலை) அபகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. கோவில் பூஜைகளில் குறைகள் கருவறையில் இருந்த கோடிகணக்கில் தங்கம், வைரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.
கடவுளை விட நாங்கள் தான் பெரியவர்கள் என கூறும் சுவாமியின் பணியாளர்கள் என பல்வேறு குற்றங்கள் நடந்து இருப்பது அம்பலம் ஆகி உள்ளது. தெய்வ பிரசன்னத்தில் வெளியாகி உள்ள இந்த தகவல்கள் பக்தர்களையும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.